உலக செய்திகள்

சீனா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை + "||" + China-USA Trade negotiation

சீனா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை

சீனா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை
சீனா-அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
பீஜிங்,

உலகின் முன்னணி பொருளாதார நாடுகளாக திகழும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கும் இடையே கடந்த ஆண்டில் வர்த்தகப்போர் மூண்டது.

கடந்த மாதம் அர்ஜென்டினாவில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசி இரு தரப்பு வர்த்தக போரை 2019 மார்ச்-1 வரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில், சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தை வருகிற 7, 8 தேதிகளில் சீன தலைநகர் பீஜிங்கில் நடக்க இருக்கிறது. இதற்காக அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சீனாவுக்கு செல்கிறார்கள்.

இரு நாட்டு துணை நிதி மந்திரிகளும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சீன வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார்: சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா பேட்டி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
2. டிரம்ப் பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்
டிரம்ப் பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. அமெரிக்கப் படைகள் சிரியாவிலிருந்து வெளியேற வேண்டும் -ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கப் படைகள் சிரியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
4. அமெரிக்காவில் சோகம்: தீப்பிடித்த வீட்டில் நாயை மீட்க போனவர் பலி
அமெரிக்காவின் மேய்ன் மாகாணம் ஓர்லண்ட் நகரை சேர்ந்தவர் சாம் கிராபோர்ட் (வயது 40). இவர் அங்குள்ள ஒரு வீட்டில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார்.
5. சீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்
சீனாவுக்கு கழுதைகளை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்ய உள்ளது.