ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 15 பேர் சுட்டுக்கொலை


ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 15 பேர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 5 Jan 2019 11:00 PM GMT (Updated: 5 Jan 2019 7:26 PM GMT)

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ராணுவத்துக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் பர்யாப் மாகானத்தில் உள்ள அல்மார் மாவட்டத்தில் சில பகுதிகளில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிகளுக்கு விரைந்து சென்ற ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் பயங்கரவாதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே தலீபான் பயங்கரவாதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் ஏராளமான பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.

பதில் தாக்குதலின்போது பயங்கரவாதிகள் பயன்படுத்திய நவீன ஆயுதங்களையும் சிறப்பு அதிரடிப்படையினர் கைப்பற்றினர். ராணுவத் தரப்பில் ஏற்பட்ட உயிர் சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரிய வரவில்லை.

Next Story