உலக செய்திகள்

அமெரிக்கா: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி + "||" + USA: killed five members of the same family in a road accident

அமெரிக்கா: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

அமெரிக்கா: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாயினர்.
சிகாகோ,

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தின் லெஷிங்டன் நகரில் உள்ள நெடுஞ்சாலையில், கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பயணம் செய்தனர்.

அப்போது அதே சாலையில் போக்குவரத்து விதிமுறை மீறி தவறான பாதையில் வந்த ஜீப் ஒன்று காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்தது.


இந்த கோர விபத்தில் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். அதே போல் விபத்துக்கு காரணமான ஜீப் டிரைவரும் பலியானார்.

இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த இஸ்ஸாம் அப்பாஸ்(42), ரிமா அப்பாஸ்(38), அலி அப்பாஸ்(14), இசபெல்லா அப்பாஸ்(13), ஜிசெல்லி அப்பாஸ்(7) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகை
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இன்று வருகை தருகிறார்.
2. உலகைச்சுற்றி...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 வயதான வாலிபர் பலியானார்.
3. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சவூதி அரேபியா பயணம்
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
4. கோபா அமெரிக்கா கால்பந்து: பெருவை ஊதித்தள்ளியது பிரேசில்
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பெருவை ஊதித்தள்ளி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.
5. அமெரிக்காவுக்கு புதிய ராணுவ மந்திரி - மார்க் எஸ்பரை தேர்வு செய்தார், டிரம்ப்
அமெரிக்காவுக்கு புதிய ராணுவ மந்திரியாக மார்க் எஸ்பரை டிரம்ப் தேர்வு செய்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...