உலக செய்திகள்

உலகைச் சுற்றி... + "||" + Around the world ...

உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...
அமெரிக்காவுடன் நடுத்தர ரக அணு ஆயுதங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.
* அமெரிக்காவுடன் நடுத்தர ரக அணு ஆயுதங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. அதே சமயம் இந்த பேச்சுவார்த்தை சம உரிமைகள் அடிப்படையில் நிகழ வேண்டும் எனவும் ரஷியா அறிவுறுத்தியுள்ளது.

* உள்நாட்டு போர் காரணமாக சிரியாவில் இருந்து லெபனான் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கு அகதிகளாக சென்ற 800-க்கும் மேற்பட்டோர் கடந்த 24 மணி நேரத்தில் தாயகம் திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் நடத்தி வரும் குளிர் கால தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 146 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி 2 நாட்கள் நடந்து முடிந்த நிலையில், பேச்சுவார்த்தை 3-வது நாளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

* தென்ஆப்பிரிக்காவில் பிரிட்டோரியா நகரில் 2 ரெயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 620 ஆக உயர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் அவசர நிலைக்கு எதிராக ஜனநாயக கட்சியினர் தீர்மானம் - நாடாளுமன்றத்தில் 26-ந்தேதி ஓட்டெடுப்பு
அமெரிக்காவில் டிரம்ப் பிறப்பித்துள்ள அவசர நிலைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்துள்ள தீர்மானம் மீது 26-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
2. அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்
அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை அலுவலகத்தில் வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டது.
3. தெலுங்கானாவை சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
தெலுங்கானாவை சேர்ந்த கோவர்தன் ரெட்டி என்பவர் அமெரிக்காவில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
4. அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தம்பதி மர்ம சாவு - தற்கொலையா? போலீசார் விசாரணை
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு தம்பதி, வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5. அமெரிக்கா-தலீபான் இடையே புதிய பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் தொடங்கியது
பாகிஸ்தானில் அமெரிக்கா-தலீபான் இடையே புதிய பேச்சுவார்த்தை தொடங்கியது.