உலக செய்திகள்

சிலி: சாலை விபத்தில் 9 பேர் பலி, 11 பேர் காயம் + "||" + Nine killed, 11 injured in road crash in Chile

சிலி: சாலை விபத்தில் 9 பேர் பலி, 11 பேர் காயம்

சிலி: சாலை விபத்தில் 9 பேர் பலி, 11 பேர் காயம்
சிலியில் நடைபெற்ற சாலை விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.
சாண்டிகோ,

சிலி நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது லேக் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில், மாபில் மற்றும் வல்டிவா ஆகிய இருநகரங்களையும் இணைக்கும் இருவழிச்சாலையில், பயங்கர விபத்து நடைபெற்றது. ஒரு கார், டிரெயிலர் லாரி, வேன் என மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டன. இந்த  விபத்தில், ஒரு குழந்தை உட்பட 9 பேர் பலியாகினர். 11 பேர் காயம் அடைந்தனர். 

10 மாத கைக்குழந்தை மற்றும் இரண்டு நபர்களுடன் வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிரெயிலர் லாரி மீது மோதியுள்ளது. கார் மோதியதில், லாரி நிலை தடுமாறி எதிர்திசையில் உள்ள சாலைக்கு சென்று அங்கு வந்த வேனுடன் மோதியுள்ளது. உள்ளூர் நாளிதழ்களில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.  காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கடலூரில் சாலை விபத்து; 3 பேர் பலி
கடலூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
2. மெக்ஸிகோ : சாலை விபத்தில் 21 பேர் பலி
மெக்ஸிகோவில் நடந்த சாலை விபத்தில் 21 பேர் பலியாகினர்.
3. சிலி நாட்டில் பயங்கரம்: வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம் - பெண்கள் உள்பட 6 பேர் பலி
சிலி நாட்டில், வீட்டின் மீது விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் பலியாயினர்.
4. நாமக்கல் சாலை விபத்தில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம்
நாமக்கல் சாலை விபத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம் அடைந்தார்.
5. தேனி அருகே பேருந்து - வேன் மோதி விபத்து நேரிட்டதில் 4 பேர் உயிரிழப்பு
தேனி அருகே பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து நேரிட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.