உலக செய்திகள்

சீனாவில் சாலையில் வைத்த விளம்பர திரையில் ஆபாச படங்கள்; அதிர்ச்சி அடைந்த மக்கள் + "||" + Worker browses porn for 90 minutes, people watch on big screen on road

சீனாவில் சாலையில் வைத்த விளம்பர திரையில் ஆபாச படங்கள்; அதிர்ச்சி அடைந்த மக்கள்

சீனாவில் சாலையில் வைத்த விளம்பர திரையில் ஆபாச படங்கள்; அதிர்ச்சி அடைந்த மக்கள்
சீனாவில் சாலையில் வைத்த விளம்பர திரையில் ஆபாச படங்கள் வெளியானது கண்டு அந்த வழியே சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெய்ஜிங்,

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் லியாங் நகரில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர திரை ஒன்றில் இரவு நேரத்தில் ஆபாச படங்கள் ஓடி கொண்டு இருந்துள்ளன.  இதனை அந்த வழியே சென்ற மக்களில் சிலர் அவற்றை புகைப்படங்களாகவும் சிலர் வீடியோவாகவும் படம் பிடித்து உள்ளனர்.

இவை சீன சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.  இந்த பட காட்சிகளை அவரது கணினியில் பார்த்து கொண்டிருந்த பணியாளர் அவை திரையில் வராத வகையில் ஆஃப் செய்யவில்லை.  இதனால் 90 நிமிடங்களுக்கு ஆபாச பட காட்சிகள் திரையில் ஓடி கொண்டு இருந்துள்ளன.  இதனை அறிந்த சக பணியாளர் ஒருவர் பணியில் இருந்த நபரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உள்ளார்.  அதன்பின்பே இவற்றை கவனித்து கணினியில் ஆஃப் செய்துள்ளார்.

இதேபோன்று கடந்த வருடம் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள திரை ஒன்றில் ஆபாச பட காட்சிகள் ஓடிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர கிராம மக்கள் முடிவு
புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர கிராமமக்கள் முடிவு செய்தனர். இதற்காக வக்கீல்களிடம் மனு கொடுக்க பொதுமக்கள் கறம்பக் குடியில் திண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ஐகோர்ட்டு தடை உத்தரவு எதிரொலி, பொங்கல் பரிசு ரூ.1000 வாங்குவதற்கு ரேஷன்கடைகளில் குவிந்த மக்கள்
ஐகோர்ட்டு விதித்த தடையால் பொங்கல் பரிசு ரூ.1,000 வாங்க ரேஷன்கடைகளில் மக்கள் குவிந்தனர். மாலை வரை காத்திருந்தும் கிடைக்காமல் திரும்பி சென்றனர்.
3. திபெத்தில் மித அளவிலான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு
திபெத்தின் தென்மேற்கே மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. வடமாநிலங்களில் கடும் குளிர் - மக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்
வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.
5. விவசாயியிடம் ஜேப்படி: வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி - பொதுமக்கள் ஆவேசம்
மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயியிடம் ஜேப்படி செய்த வாலிபரை அப்பகுதி மக்கள் பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத் தனர்.