உலக செய்திகள்

உலகைச் சுற்றி + "||" + Around the world

உலகைச் சுற்றி

உலகைச் சுற்றி
போர்ட்டோ ரிகோ நாட்டை சேர்ந்த பிரபல ரப் இசைக்கலைஞர் கெவின் பிரட் மர்ம ஆசாமிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

* கியூபாவில் குவண்டனாமோ மாகாணத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ், முன்னால் சென்ற காரை முந்த முயன்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். வெளிநாட்டினர் 20 பேர் உள்பட 33 பேர் படுகாயம் அடைந்தனர்.

*வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் பதவி ஏற்றதை கண்டித்து, பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள வெனிசுலா தூதரகத்தை ஏராளமானவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்டி அடித்தனர்.

*காங்கோ நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் எதிர்க்கட்சி தலைவரான பெலிக்ஸ் திசேக்கெடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

*போலந்து நாட்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் சீனாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

*போர்ட்டோ ரிகோ நாட்டை சேர்ந்த பிரபல ரப் இசைக்கலைஞர் கெவின் பிரட்(வயது24) மர்ம ஆசாமிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் ஓரின சேர்க்கை ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.