உலக செய்திகள்

தைவான் பிரதமராக சூ தசெங்-சாங் நியமனம் + "||" + Su Tseng-chang appointed as Taiwan prime minister

தைவான் பிரதமராக சூ தசெங்-சாங் நியமனம்

தைவான் பிரதமராக சூ தசெங்-சாங் நியமனம்
தைவான் பிரதமராக சூ தசெங்-சாங் நியமிக்கப்பட்டார்.
தைபே,

தைவானில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பிரதமர் வில்லியம் லையின் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி பெருத்த பின்னடவை சந்தித்தது. தைவானை பொறுத்த மட்டில் உள்ளூர் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் போது, தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பதவி விலகுவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் பிரதமர் வில்லியம் லை தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்றுமுன்தினம் இரவு அறிவித்தார். அதனை தொடர்ந்து முன்னாள் பிரதமரும், ஜனநாயக முற்போக்கு கட்சியின் முன்னாள் தலைவருமான சூ தசெங்-சாங்கை புதிய பிரதமராக அதிபர் தசாய் இங்-வென் நேற்று நியமித்தார்.

இதற்கு முன் சூ தசெங்-சாங் கடந்த 2006-ம் ஆண்டு பிரதமராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் 2007-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொது செயலாளராக திருநங்கை அப்ஸரா ரெட்டி நியமனம்
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொது செயலாளராக திருநங்கை அப்ஸரா ரெட்டி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
2. பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பு நிர்வாகியாக ராஜீவ் பிரதாப் ரூடி நியமனம்
முன்னாள் மத்திய மந்திரி ராஜீவ் பிரதாப் ரூடி பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பு நிர்வாகியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
3. கோவை வேளாண் பல்கலை கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்
கோவை வேளாண் பல்கலை கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
4. தகுதியின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டேன்; சென்னை பல்கலை கழக துணைவேந்தர் துரைசாமி
தகுதியின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டேன் என சென்னை பல்கலை கழக துணைவேந்தர் துரைசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
5. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது.