உலக செய்திகள்

நைஜீரியா: டேங்கர் லாரி வெடித்து 20 பேர் பலி + "||" + Nigeria: Tanker lorry Exploding 20 dead

நைஜீரியா: டேங்கர் லாரி வெடித்து 20 பேர் பலி

நைஜீரியா: டேங்கர் லாரி வெடித்து 20 பேர் பலி
நைஜீரியாவில் டேங்கர் லாரி கவிழ்ந்து, வெடித்து சிதறிய விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அபுஜா,

நைஜீரியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் கிராஸ் ரிவர் மாநிலத்தில் உள்ள ஒடுக்பானி நகரில் நேற்று எண்ணெய் ஏற்றிச்சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி நடு ரோட்டில் கவிழ்ந்தது. இதனால் அந்த லாரியில் இருந்து எண்ணெய் ஆறாக ஓடியது. இதையறிந்த மக்கள் அங்கு விரைந்து சென்று தாங்கள் கொண்டு வந்திருந்த கேன்களில் எண்ணெயை சேகரிக்கத் தொடங்கினர்.


அப்போது அந்த டேங்கர் லாரி திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அங்கிருந்த 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தீயில் கருகினர். இவர்களில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் உடல் கருகிய நிலையில் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.தொடர்புடைய செய்திகள்

1. நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து 50 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து தீ பிடித்து எரிந்ததில் 50 பேர் உயிரிழந்தனர்.
2. நைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகள் 2 மாதங்களுக்கு பிறகு மீட்பு
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகள், 2 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர்.
3. நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி
நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்த விபத்தில் 10 பேர் பலியாகினர்.
4. நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் பலி - போகோஹரம் பயங்கரவாதிகள் அட்டூழியம்
நைஜீரியாவில் நடந்த மூன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.
5. நைஜீரியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 35 பேர் சாவு
நைஜீரியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 35 பேர் உயிரிழந்தனர்.