உலக செய்திகள்

சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் + "||" + Israeli army air strike on Syria

சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்

சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்
சிரியா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
டமாஸ்கஸ், 

சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் அடிக்கடி வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் இஸ்ரேல் போர் விமானங்கள் திடீரென தாக்குதல் நடத்தின. சரமாரியாக ஏவுகணைகளை வீசியது.

இதில் டமாஸ்கஸ் நகர விமான நிலையத்தின் அருகில் இருந்த மிகப்பெரிய ராணுவ கிடங்கு அடியோடு நாசமானது. மேலும் அப்பகுதியில் இருந்த பல கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாயின. எனினும் இதில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் உடனடியாக தெரிய வரவில்லை.

அதேநேரம் இஸ்ரேலின் ஏராளமான ஏவுகணை தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்ததாக சிரியா தெரிவித்தது.