உலக செய்திகள்

கனடா நாட்டில் மேற்கூரை மீது மாடி பஸ் மோதி 3 பேர் பலி - 23 பேர் காயம் + "||" + Terrace on the roof of the bus crash kills 3 in Canada - - 23 people were injured

கனடா நாட்டில் மேற்கூரை மீது மாடி பஸ் மோதி 3 பேர் பலி - 23 பேர் காயம்

கனடா நாட்டில் மேற்கூரை மீது மாடி பஸ் மோதி 3 பேர் பலி - 23 பேர் காயம்
கனடா நாட்டில் மேற்கூரை மீது மாடி பஸ் மோதிய விபத்தில் 3 பேர் பலியாயினர். மேலும் 23 பேர் காயம் அடைந்தனர்.
ஒட்டாவா, 

கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் 25-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மாடி பஸ் வெஸ்ட்போரோ பகுதியில் உள்ள பஸ்நிறுத்தத்துக்கு வந்தது. அப்போது அந்த பஸ் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சுரங்க நடைபாதையின் மேற்கூரையின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் ஆவர். ஒருவர் பஸ்சில் பயணம் செய்தவர்.

மேலும் இந்த விபத்தில் 23 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த தகவலை அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.