உலக செய்திகள்

இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் பலி; 10 பேர் படுகாயம் + "||" + Palestinian woman killed in Israeli military attack 10 people were injured

இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் பலி; 10 பேர் படுகாயம்

இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் பலி; 10 பேர் படுகாயம்
இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் ஒருவர் பலியானதுடன், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
காஸா, 

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே உள்ள காஸா முனைப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது. தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் காஸா பகுதி போராளிகள் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதலும் நடத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று காஸா முனைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது ஒரு குழுவினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் ராணுவமும் பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்பாலஸ்தீன பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பத்திரிகையாளர் ஒருவர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேற்கண்ட தகவலை பாலஸ்தீன சுகாதாரத்துறை மந்திரி அஷரப் குவத்ரா தெரிவித்தார்.