உலகைச்சுற்றி....


உலகைச்சுற்றி....
x
தினத்தந்தி 13 Jan 2019 10:45 PM GMT (Updated: 13 Jan 2019 7:12 PM GMT)

ஆப்கானிஸ்தானின் ஹெரத் மாகாணத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 போலீசார் மற்றும் ஒரு குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர்.


* ஆப்கானிஸ்தானின் ஹெரத் மாகாணத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 போலீசார் மற்றும் ஒரு குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

* சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகள் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் செல்லும் விமானங்களை நிறுத்திவைத்திருந்தன. தற்போது அந்த 3 நாடுகளும் சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கு மீண்டும் விமானங்களை இயக்க தொடங்கி உள்ளன.

* இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் உள்ள ரமல்லா நகரில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பாலஸ்தீனர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

* பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவடார் நகர துறைமுகத்தில் 10 மில்லியன் டாலர் மதிப்பில் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க சவுதி அரேபியா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அடுத்த மாதம் (பிப்ரவரி) பாகிஸ்தான் செல்வார் எனவும் கூறப்படுகிறது.

* அமெரிக்க செனட் சபையின் முதல் இந்து உறுப்பினர் என பெயர் பெற்ற துளசி கபார்ட் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மந்திரி சபையில் நகர்புற வளர்ச்சி மந்திரியாக இருந்த ஜூலியான் காஸ்ட்ரோ ஆகிய இருவரும் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.



Next Story