உலக செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு + "||" + In China, the number of people killed in coal mine accident has risen to 21

சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.
பீஜிங்,

சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷான்சி மாகாணத்தில் ஷென்மு நகரில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாரத வகையில் சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்பு குழுவினர் விரைந்து வந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


முன்னதாக 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 66 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.