பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை


பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை
x
தினத்தந்தி 16 Jan 2019 10:59 AM GMT (Updated: 16 Jan 2019 10:59 AM GMT)

அறிவியல் ஆராய்ச்சி நிலையம் ஒன்றில் பெண் ஆராய்ச்சியாளரை முதலை உயிருடன் விழுங்கி உள்ளது.

இந்தோனேசியாவின் சுலவேசி பகுதியில் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் ஒன்று உள்ளது. இங்கு 17 அடி முதலை ஒன்று அதற்கான இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த முதலைக்கு பெண் ஆராய்ச்சியாளரான டேசி டூவோ உணவு கொடுக்க முயன்றிருக்கிறார். அப்போது 8 அடி தூரம் தாவிக் குதித்த அந்த முதலை டேசியை அப்படியே தரதரவென அதன் இடத்திற்கு வாயால் இழுத்துள்ளது. பின்னர் அவரை உயிருடன் அப்படியே விழுங்கியதாக கூறப்படுகிறது.

டேசி, முதலையின் வாயில் பாதி உள்ளே சென்ற நிலையில் அதனை டேசியின் தோழி கண்டிருக்கிறார். இருப்பினும் முதலையின் வாயில் இருந்து டேசியை மீட்க முடியவில்லை. இதனிடையே டேசிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது இவ்வளவு அருகிலா செல்வது..? விலங்குகளிடம் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டுமா என தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சிலரோ இவ்வளவு தூரம் முதலை தாவுமா..? வேறு ஏதேனும் சம்பவங்கள் நடந்துவிட்டதா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

Next Story