உலக செய்திகள்

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம் + "||" + Trump taps 3 Indian-American experts for key admin posts

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு பெண் உள்பட 3 இந்திய அமெரிக்கர்களை அதிபர் டிரம்ப் நியமித்து உள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு ஒரு பெண் உள்ளிட்ட 3 இந்திய அமெரிக்கர்களை அதிபர் டொனால்டு டிரம்ப் நியமித்து உள்ளார்.

இவர்களில் ஆற்றல் துறையின் (அணு ஆற்றல்) உதவி செயலாளர் பதவிக்கு ரீட்டா பேரன்வால், தனித்துவ மற்றும் சிவில் உரிமைகள் கண்காணிப்பு வாரியத்திற்கு ஆதித்ய பம்சாய் மற்றும் கஜானா உதவி செயலாளராக பிமல் பட்டேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களின் நியமனம் பற்றிய தகவல் செனட் சபைக்கு நேற்று அனுப்பப்பட்டது.  இதுவரை முக்கிய பதவிகளில் 24க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்களை அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார்.  இவர்களில் கேபினட் அந்தஸ்து பெற்ற முதல் இந்திய அமெரிக்கரான நிக்கி ஹாலே மற்றும் துணை பத்திரிகை செயலாளராக இருந்த முதல் இந்திய அமெரிக்கரான ராஜ் ஷா ஆகிய இருவரும் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேறினர்.