உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 17 Jan 2019 10:30 PM GMT (Updated: 17 Jan 2019 4:52 PM GMT)

* கேமரூனில் பியுவா-கும்பா நெடுஞ்சாலையில் துப்பாக்கி ஏந்திய நபர்கள்,36 பயணிகளை கடத்திச்சென்று விட்டனர்.

* ஆப்கானிஸ்தானில் பாத்கிஸ் மாகாணத்தில் ராணுவம் எடுத்த அதிரடி நடவடிக் கையில் 39 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஏராளமாக வெடிபொருட்கள் அழிக்கப்பட்டன. 

* மாலி–நைஜர் நாட்டு எல்லையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். 

* அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வடகொரியா இன்னும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது என அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறி உள்ளார்.

* தென் சீனக்கடல் பகுதியில் அமெரிக்கா, இங்கிலாந்து போர்க்கப்பல்கள் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டன.

* கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள சொகுசு ஓட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

* உலகின் முன்னணி முதலீட்டு மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான ‘வான்கார்டு’ குழுமத்தின் நிறுவனர் ஜான் போக்கிள், அமெரிக்காவில் பிரைன் மாவரில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.

Next Story