உலக செய்திகள்

தந்தை மீது பாடகி ரிஹானா வழக்கு தன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார் + "||" + Rihanna case for singing on father Misuse his name

தந்தை மீது பாடகி ரிஹானா வழக்கு தன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்

தந்தை மீது பாடகி ரிஹானா வழக்கு தன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்
பிரபல பாப் இசைப்பாடகி ரிஹானா. இவரது தந்தை ரொனால்டு பென்டி. ரொனால்டு பென்டி, தனது கூட்டாளியான மோசஸ் பெர்கின்ஸ் என்பவருடன் சேர்ந்து பென்டி என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார்.

வாஷிங்டன், 

ரிஹானாவும் பென்டி பியுட்டி என்ற பெயரில் அழகு சாதனப்பொருட்கள் நிறுவனம் ஒன்றை 2017–ம் ஆண்டு தொடங்கி நடத்தி வந்தார். இவர் உள்ளாடை நிறுவனம் ஒன்றையும் சொந்தமாக நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ரிஹானாவின் பெயரை அவரது அனுமதியின்றி, அவரது தந்தை ரொனால்டு பென்டியும், மோசஸ் பெர்கின்சும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் தங்கள் நிறுவனத்துக்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை நிறுத்திக்கொள்ளுமாறு பாடகி ரிஹானா கூறியும், அவர்கள் செவி சாய்க்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து தந்தை ரொனால்டு பென்டி, அவரது கூட்டாளி மோசஸ் பெர்கின்ஸ் ஆகியோர் மீது பாடகி ரிஹானா கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார்.


ஆசிரியரின் தேர்வுகள்...