அமெரிக்கா இந்தியாவுடன் ஏவுகணை பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதித்து உள்ளது -பென்டகன்


அமெரிக்கா இந்தியாவுடன் ஏவுகணை பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதித்து உள்ளது -பென்டகன்
x
தினத்தந்தி 18 Jan 2019 5:30 AM GMT (Updated: 18 Jan 2019 5:30 AM GMT)

அமெரிக்கா இந்தியாவுடன் ஏவுகணை பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதித்தது என பென்டகனின் 2019-ம் ஆண்டு ஏவுகணை பாதுகாப்பு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்

பென்டகனின் 2019-ம் ஆண்டு ஏவுகணை பாதுகாப்பு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அமெரிக்கா "சாத்தியமான ஏவுகணை பாதுகாப்பு ஒத்துழைப்பு" பற்றி இந்தியாவுடன் விவாதித்துள்ளது. இந்த விவாதம் ஒரு முக்கிய பாதுகாப்புப் பங்குதாரராகவும், "நமது இந்திய-பசிபிக் மூலோபாயத்தின் முக்கிய அங்கமாகவும்" இந்திய நிலைப்பாட்டின் "இயல்பான வளர்ச்சியின்" ஒரு பகுதியாகும். இந்தியாவுடன் இந்த  பேச்சுவார்த்தைகள் நடக்கும்போது, "தென் ஆசியாவின் பல நாடுகள் மேம்பட்ட மற்றும் பலவிதமான பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணை திறன்களை வளர்த்து வருகின்றன" என கூறப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வறிக்கை  வருடாந்திர ஆண்டுக்கான பென்டகனின் ஏவுகணை பாதுகாப்புத் திட்டங்களை வழிகாட்டக்கூடிய கொள்கைகள், உத்திகள் மற்றும் திறன்களை விவரித்து உள்ளது.

கடந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதினின் இந்திய சுற்றுப்பயணத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் S400 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களுக்கு பின்னர் இந்த ஏவுகணை பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விவாதம் நடந்து உள்ளது.

இந்த 108 பக்கம் ஆய்வறிக்கையில், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க உறவு குறித்து பேசுகையில், இந்தியா-பசிபிக் பிராந்தியத்தில் எங்கள் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திரம் ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் வலுவான இருதரப்பு உறவுகள் மற்றும் இந்தியா போன்ற மற்றவர்களுடன் பாதுகாப்பு உறவுகள் வளர்ந்துள்ளன என கூறி உள்ளது.

Next Story