உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 18 Jan 2019 10:30 PM GMT (Updated: 18 Jan 2019 4:37 PM GMT)

* சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டளை மையத்தை அமெரிக்க கூட்டுப்படைதகர்த்து உள்ளது.

* அமெரிக்காவில் டெக்சாஸ்சில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதில் ஒரு பெண் பலி ஆனார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

* சிங்கப்பூரில் மல்லிகா பேகம் (வயது 40) என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையில் கிருஷ்ணன் என்ற இந்தியர் கைது செய்யப்பட்டார். அவருக்கும் அந்தப்பெண்ணுக்கும் இடையே உறவு இருந்ததாகவும், அதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

* அமெரிக்காவில் ஆசிய அமெரிக் கர்கள், பசிபிக் தீவினருக்கான ஜனாதிபதியின் ஆலோசனை குழுவில் இந்திய நிதி வல்லுனரான பிரேம் பரமேஸ்வரன் (50) உறுப்பினராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

* ஆப்கானிஸ்தானில் ஹெராத் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் ராணுவம் கூறுகிறது.

* ஜப்பான் 7 செயற்கைகோள்களுடன் எப்சிலோன்-4 என்ற ராக்கெட்டை உச்சினூரா விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது நாட்டின் ஏவுகணை திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

Next Story