உலக செய்திகள்

நார்வேயில் அதிக குழந்தை பெறச்சொல்லும் பெண் பிரதமர் + "||" + In Norway Female prime minister Will tell you to get more baby

நார்வேயில் அதிக குழந்தை பெறச்சொல்லும் பெண் பிரதமர்

நார்வேயில் அதிக குழந்தை பெறச்சொல்லும் பெண் பிரதமர்
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில் எர்னா சோல்பெர்க் என்ற பெண் தலைவர் பிரதமராக உள்ளார்.

ஆஸ்லோ, 

சமீபத்தில் நாட்டு மக்களுக்கு எர்னா சோல்பெர்க்  ஒரு செய்தி விடுத்தார். அந்தச் செய்தியில் அவர், ‘‘நமது நாட்டுக்கு இப்போதைய தேவை அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள்தான். இதை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன்’’ என கூறி உள்ளார்.

மேலும் ‘‘இனி வரும் காலத்தில், இதேபோல் நாடு இருந்தால் (பிறப்பு வீதம் குறைவாக இருந்தால்) நாம் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்’’ எனவும் அவர் எச்சரித்தார்.

இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக நார்டிக் நாடுகள் என்று அழைக்கப்படக்கூடிய நார்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து நாடுகளில் குழந்தைகள் பிறப்பு வீதம் குறைவாக உள்ளது.