சீனாவின் பொருளாதார வளர்ச்சி 28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு குறைந்தது


சீனாவின் பொருளாதார வளர்ச்சி 28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு குறைந்தது
x
தினத்தந்தி 21 Jan 2019 6:56 AM GMT (Updated: 21 Jan 2019 7:28 AM GMT)

சீனாவின் பொருளாதார வளர்ச்சி 28 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 6.6 சதவீதமாக குறைந்துள்ளது.

பெய்ஜிங்,

சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு 6.8 சதவீதமாக குறைந்துள்ளது. உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா, அமெரிக்காவுடன் வர்த்தகப்போரில் ஈடுபட்டதன் விளைவாக சீனாவின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது.

சீனாவின் தேசிய புள்ளியியல், இந்த  தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2017-ஆம் ஆண்டு 6.8 சதவீதமாக இருந்தது. கடந்த 1990 ஆம் ஆண்டு 3.9 சதவீதமாக இருந்த பிறகு, தற்போது, ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டுக்கான சீனாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு 6.5 என்ற அளவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து இருப்பது சர்வதேச பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. 

Next Story