உலக செய்திகள்

ரஷ்யாவில் இரண்டு கப்பல்களில் தீ விபத்து: இந்தியர்கள் உட்பட 11 பேர் பலி + "||" + At Least 11 Dead As Two Ships With Indian Crew Catch Fire Off Russia

ரஷ்யாவில் இரண்டு கப்பல்களில் தீ விபத்து: இந்தியர்கள் உட்பட 11 பேர் பலி

ரஷ்யாவில் இரண்டு கப்பல்களில் தீ விபத்து: இந்தியர்கள் உட்பட  11 பேர் பலி
ரஷ்யாவில் இரண்டு கப்பல்களில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 11 பேர் பலியாகினர்.
மாஸ்கோ,

ரஷ்ய கடல் பகுதியில் 2 எரிபொருள் கப்பல்கள் தீ பிடித்து விபத்துக்குள்ளாகின. இதில் இந்தியர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விபத்துக்குள்ளான 2 கப்பல்களிலும் தான்சானியா நாட்டுக்கொடி பறந்துள்ளது. ஒரு கப்பலில் திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.) இருந்திருக்கிறது. மற்றொரு கப்பலில் காலியான டாங்க் இருந்துள்ளது. ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருள் மாற்றம் செய்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

கேண்டி என்ற பெயர் கொண்ட ஒரு கப்பலில் 17 பேர் இருந்துள்ளனர். அவர்களில் 8 பேர் இந்தியர்கள். ஏனையோர் துருக்கி நாட்டைச்சேர்ந்தவர்கள் ஆவர்.  விபத்துக்குள்ளான இன்னொரு கப்பலின் பெயர் தி மேஸ்ட்ரோ. அதில் 15 பேர்  இருந்தனர். அவர்களில் துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் 7 பேர். இந்தியாவை சேர்ந்தவர்கள் 7 பேர். இதேபோன்று லிபியா, ரஷ்யாவை சேர்ந்தவர்களும் தி மேஸ்ட்ரோவில் இருந்துள்ளனர். 

 தீ விபத்தில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் மோசமான வானிலை காணப்படுவதால் உயிரிழந்தவர்களின் உடல்களையும், கப்பலில் சிக்கித் தவிப்பவர்களையும் மீட்பதில் சிக்கல் நிலவுவதாகவும்,  வானிலை சாதகமாகும் போது மீட்பு பணிகளை தொடங்குவதற்காக ரஷ்ய கடலோர பாதுகாப்பு படை மற்றும் விமானங்கள் தயார்  நிலையில் உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா
இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
2. பண்ருட்டி, நாட்டு மருந்துக்கடையில் தீ விபத்து; ரூ.6 லட்சம் சேதம்
பண்ருட்டி நாட்டு மருந்துக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.6 லட்சம் சேதமடைந்துள்ளது.
3. ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
4. மத்திய பிரதேச மாநில ஐகோர்ட்டில் தீ விபத்து
மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூரில் உள்ள ஐகோர்ட்டில் தீ விபத்து நேரிட்டுள்ளது.
5. மேற்கு வங்காளத்தில் ரசாயன குடோனில் தீ விபத்து; தீயை அணைக்க 3 மணிநேரம் தொடரும் போராட்டம்
மேற்கு வங்காளத்தில் ரசாயன குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...