சிறை தண்டனை அனுபவித்து வரும் பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் அனுமதி


சிறை தண்டனை அனுபவித்து வரும் பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 23 Jan 2019 2:57 AM GMT (Updated: 23 Jan 2019 2:57 AM GMT)

ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இஸ்லமாபாத்

அல் -அஸிஸியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்த நிலையில்,  உடல் நலக்குறைவு காரணமாக நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இது​கு​றித்து, அவ​ரது மகள் மரி​யம் நவாஸ் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​ய​தா​வது: 

எனது தந்தை நவாஸ் ஷெரீபின் உடல் நிலை மிக​வும் மோச​மாக உள்​ளது. அவர் தற்​போது லாகூ​ரி​லுள்ள பஞ்​சாப் இரு​தய நோய் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​ம​னை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். அவ​ரைக் காண அந்த மருத்​து​வ​ம​னைக்​குச் செல்ல நான் விரும்​பி​னேன். 

ஆனால், பாது​காப்பு கார​ணங்​க​ளுக்​காக அங்கு வர வேண்​டாம் என்று எனது தந்தை மறுத்​து​விட்​டார்.அவ​ரது உடல் நிலை குறித்த மருத்​துவ அறிக்கை எங்​க​ளுக்கு தரப்​ப​ட​வில்லை. இது​கு​றித்து சிறைத் துறை அதி​கா​ரி​க​ளி​ட​மும், பஞ்​சாப் மாகாண உள்​துறை அமைச்​ச​கத்​தி​ட​மும் பல முறை கோரிக்கை விடுத்​தும் எந்​தப் பல​னு​மில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


Next Story