உலக செய்திகள்

இளமையாக தோன்ற சொந்த ரத்தத்தினாலான கிரீமை பயன்படுத்தும் பிரபல மாடல் அழகி + "||" + “Vampire Facials”: Key to Victoria Beckham’s Eternal Youth

இளமையாக தோன்ற சொந்த ரத்தத்தினாலான கிரீமை பயன்படுத்தும் பிரபல மாடல் அழகி

இளமையாக தோன்ற சொந்த ரத்தத்தினாலான கிரீமை பயன்படுத்தும் பிரபல மாடல் அழகி
இங்கிலாந்தை சேர்ந்த பிரபலம் விக்டோரியா பெக்காம் தனது சொந்த ரத்தத்தினாலான கிரீமை பயன்படுத்துகிறார் என்ற செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள்  கேப்டன் டேவிட் பெக்காமின் மனைவியும், பிரபல மாடல் அழகியுமான  விக்டோரியா பெக்காம் (44 வயது) தன் ரத்தத்தினால் தயாரிக்கப்பட்ட கிரீமை தன் முகத்திற்கு பயன்படுத்துவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

லண்டனை சேர்ந்த மருத்துவர் பார்பரா ஸ்டர்ம், பிரபலங்களுக்கான ‘வேம்பையர் பேசியல்’ ( Vampire Facial) முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வித்தியாசமான முறையில் பேசியல் செய்து கொள்ள முடிவு செய்த விக்டோரியா, தன் ரத்தத்தினாலான பிரத்யேக கிரீமை அந்த மருத்துவரை வைத்து உருவாக்கி அதனை பயன்படுத்தி வருகிறார். 

வயதாவதால் ஏற்படும் மாற்றத்தை தடுப்பதற்காக அவரது சொந்த ரத்த அணுக்களை எடுத்து மிக பிரத்யேகமாக தயாரித்துள்ளார் அந்த மருத்துவர். 1200 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 97 ஆயிரம் ரூபாய்) மதிப்புள்ள கிரீமை முகத்திற்கு பயன்படுத்தும்போது, தன் முகம் மிகவும் பொலிவுடன் இருப்பதாகவும்,  இதனால் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக விக்டோரியா பெக்காம் கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...