அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, முதல் இந்திய வம்சாவளி வேட்பாளருக்கு 24 மணி நேரத்தில் ரூ.11 கோடி நிதி வசூல்


அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, முதல் இந்திய வம்சாவளி வேட்பாளருக்கு 24 மணி நேரத்தில் ரூ.11 கோடி நிதி வசூல்
x
தினத்தந்தி 23 Jan 2019 12:32 PM GMT (Updated: 23 Jan 2019 12:32 PM GMT)

அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் ரூ.11 கோடி நிதி வசூலாகி உள்ளது.

வாஷிங்டன்

2020-ம் ஆண்டிற்கான  அமெரிக்க அதிபர் வேட்பாளராக  அறிவித்த 24 மணி நேரத்திற்குள் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் ( ரூ. 10.70 கோடி ) வசூலாகி உள்ளது. 54 வயதாகும் ஹாரிஸ், 2020-ல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தனது பிரச்சாரத்தை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தார்.

ஏபிசியின் "குட் மார்னிங் அமெரிக்கா"வில் ஹாரிஸ் அறிவித்த 24 மணி நேரத்திற்குள், 38,000 நன்கொடையாளர்கள் அவரது பிரச்சாரத்திற்கு 1.5 மில்லியன் டாலர் (ரூ. 10.70 கோடி) கொடுத்தனர்.

நாங்கள் 24 மணி நேரத்திற்குள் அடிமட்ட பங்களிப்புகளில் 1.5 மில்லியன் டாலர்களை கடந்துவிட்டோம்," என ஹாரிஸ் ட்வீட் செய்துள்ளதாக பாக்ஸ் நியூஸ் குறிப்பிட்டு உள்ளது.

உண்மையில், முதல் 12 மணி நேரத்திற்குள் ஹாரிஸின் பிரச்சாரம்  1 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டி உள்ளது.

Next Story