பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி


பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 26 Jan 2019 10:43 AM GMT (Updated: 26 Jan 2019 11:08 AM GMT)

பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாறை அங்கு எப்படி சென்றது என விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் சந்திரனுக்கு சென்ற அப்பல்லோ 14 குழுவினர் 33 மணி நேரத்திற்கும் மேலாக சந்திரனின் மேற்பரப்பில் இருந்தனர். சுமார் 43 கிலோ அளவுக்கு நிலவின் பாறைகளை பூமிக்கு கொண்டு வந்து உள்ளனர்.

இது அமெரிக்காவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் உள்ள லூனார் ஆய்வு   மையத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த பாறை  பூமியில்  தோன்றியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் என ஜர்னல் எர்த் மற்றும் பிளானட்டரி சயின்ஸ் பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.

பூமி பழையது, மிகவும் பழையது. பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பூமி  மீது பல எரிகற்கள் மோதியது,  பூமி தாக்கப்பட்டது. அப்போது பெரிய பெரிய பாறைகள் தூக்கி வீசப்பட்டன. அதில் ஒன்றுதான் சந்திரனில் இருந்து  நாசா விண்வெளி வீரர்களால் எடுத்து வரப்பட்ட பாறை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மோதலின் போது, சந்திரன் இன்றைய தினத்தை விட மூன்று மடங்கு பூமிக்கு நெருக்கமாக இருந்தது.

அந்த பாறை பூமியில்  தோன்றிய பழமையான பாறையாகும், சுமார் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது. அதற்கு பிக் பெர்த்தா என்று பெயரிட்டு உள்ளனர்.

ஆய்வின் படி பிக் பெர்த்தா 2 கிராம் படிகக்கல் பெலிட்ஸ்பர் , சிர்கான் ஆகியவை கொண்டது. இவை அனைத்தும் பூமியில் காணப்படுபவையாகும்.

சந்திரனின் பகுப்பாய்வை கொண்டிருக்கும் வெப்பநிலைகளை காட்டிலும்  பூமியில் காணப்படும் வெப்பநிலையில், புவிசார் போன்ற அமைப்பில் இது உருவாகும் என்று பாறை பகுதியின் இரசாயன பகுப்பாய்வு காட்டுகிறது.

ஆய்வில்  இந்த பாறை துண்டு பூமியின் அடியில் சுமார் 20 கி.மீ. ஆழத்தில் படிகமாகி உள்ளது  என்று கூறுகிறது.

புவியின் மேற்பரப்பிற்கு கீழே 20 கி.மீ. தூரத்திலிருந்த துண்டு உருவானதாகவும் , அதன்பிறகு விரைவில் சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், இதன் மூலம் விண்வெளியில் தூக்கி வீசப்பட்டு சந்திரனை அடைந்தது  என்றும் கிடைக்கக்கூடிய சான்றுகள் தெரிவிக்கின்றன.

3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்  சந்திர மண்டலத்தில் புயல் உருவாகி  மற்றொரு தாக்கம் ஏற்பட்டு அந்த கல் புதைப்பட்டதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சுமார் 26 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக சுமார் 340 மீட்டர் அகலமும், 75 மீட்டர் அகலமும் கொண்ட பள்ளத்தில் அப்பல்லோ 14 தரையிறங்கும் இடத்திற்கு அருகே புதைந்து போய் இருந்துள்ளது. இந்த பாதிப்பால் பாறை  மறு தொடக்கம் அடைந்து உள்ளது. இது நாசா விண்வெளி வீரர்களால் சேகரிக்கப்பட்டு உள்ளது.

பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப சூரிய மண்டலத்தில் உருவானதாக நம்பப்படுகிறது.

முன்னதாக, பூமியின் பாறையின் பழமையான அறியப்பட்ட துண்டு ஒன்று  மேற்கு ஆஸ்திரேலியாவில்  ஒரு சிர்கோன் படிகமாக இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. 

Next Story