உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 28 Jan 2019 9:02 PM GMT (Updated: 28 Jan 2019 9:02 PM GMT)

* மெக்சிகோவில் குய்ரெரோ மாகாணத்தின் உள்ள ராபர்ட்டோ அல்வெர்ஸ் நகரில் ஆயுதம் ஏந்திய 2 குழுக்கள் இடையே கடும் மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் 12 பேர் உயிர் இழந்தனர். 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* சீனாவில் மனித உரிமைகள் அமைப்பின் மூத்த வக்கீலான வாங் குவான்சாங், கடந்த 2015-ம் ஆண்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 4½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

* பிரேசிலில் மினாஸ் கெராயிஸ் மாகாணத்தில் அணை உடைந்து ஊருக்குள் சேறு புகுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்து. மாயமான 305 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

* வெனிசுலா நாடாளுமன்ற சபாநாயகரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜூவான் குவைடோவை அந்நாட்டின் இடைக்கால அதிபராக ஆஸ்திரேலியா அங்கீகரித்தது.

* நெதர்லாந்தில் தி ஹேக் நகரில் உள்ள 3 மாடி குடியிருப்பில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் கட்டிடம் இடிந்து தரைமட்டானது. இதில் 9 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* எகிப்தின் சினாய் மாகாணத்தில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை குறிவைத்து ராணுவ விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் 2 பேர் பலியாகினர்.

Next Story