பூமிக்கு அருகில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட விண்மீன் திரள்களின் வரைபடம் வெளியிடப்பட்டு உள்ளது


பூமிக்கு அருகில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட விண்மீன் திரள்களின் வரைபடம் வெளியிடப்பட்டு உள்ளது
x
தினத்தந்தி 30 Jan 2019 10:49 AM GMT (Updated: 30 Jan 2019 11:57 AM GMT)

பூமிக்கு அருகில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட விண்மீன் திரள்களின் டேட்டா மற்றும் வரைபடம் வெளியிடபட்டு உள்ளது.

வாஷிங்டன்

ஸ்லொன் டிஜிட்டல் ஸ்கை சர்வே (SDSS)  கிட்டத்தட்ட 5,000க்கும் மேற்பட்ட  அருகிலுள்ள விண்மீன் திரள்கள் (galaxies) உள் அமைப்பு மற்றும் கலப்புகளை வெளிப்படுத்தும் தரவுகளை வெளியிட்டு உள்ளது. மேலும் அதன் வரைபடங்களும் வெளியிடப்பட்டு உள்ளது. 



அப்பாச்சி புள்ளியியல் ஆய்வு மையத்தில்  (MaNGA)  மேப்பிங் என்ற திட்டத்தின் மூலம் அருகிலுள்ள விண்மீன் திரள்களில் (galaxies) முதல் மூன்று ஆண்டுகள் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நிபுணர்களின் கூற்றுப்படி, முந்தைய ஆய்வுகளை விட அதிகமான விவரங்களை இந்த  அப்பாச்சி புள்ளியியல் ஆய்வு மைய  ஸ்பெக்ட்ரோஸ்கோபி தொழில்நுட்பம்  வழங்குகிறது.

ஸ்பெக்ட்ரோஸ்கோபி வானியல் நிபுணர்களுக்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். பல்வேறு அலைநீளங்களில் எவ்வளவு வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது என்பதை அளவிடுவதன் மூலம் தகவல்களைப் பெற முடிகிறது. கடந்த காலத்தில், வானியல் நிபுணர்கள் பொதுவாக ஒவ்வொரு விண்மீன் திரளுக்கும் ஒரு ஸ்பெக்ட்ரத்தை  பயன்படுத்தினர்.ஆனால் மாற்றியமைக்கப்பட்ட  ஸ்பெக்ட்ரோஸ்கோபி (ஒருங்கிணைந்த துறை நிறமாலை என்றும் அழைக்கப்படுகிறது) விண்மீன் திரள்களில் உள்ள ஒவ்வொரு இடத்தையும் உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான தனி ஸ்பெக்ட்ராக்களைக் கொண்டுள்ளது.

அப்பாச்சி புள்ளியியல் ஆய்வு மைய  சோதனையாளர்  கெவின் பண்டி கூறியதாவது:-

மாற்றி அமைக்கப்பட்ட ஸ்பெக்ட்ரோஸ்கோபி  ஒரு விண்மீன் திரள்களை ஊடுருவி அதன் உள் அமைப்பு மற்றும் அதன் நட்சத்திரங்கள் மற்றும் வாயுக்களின் இயக்கங்களை ஆய்வு செய்ய முடிகிறது.



அப்பாச்சி புள்ளியியல் ஆய்வு மைய குறிக்கோள் இன்றைய விண்மீன் திரள்களின்   "வாழ்க்கை வரலாற்றை ஆராய்வதாகும். அவைகளின்  பிறப்பு, நட்சத்திர உருவாக்கம் மற்றும் இணைவதன் மூலம் அவைகளின் தற்போதைய வளர்ச்சி ஆகியவற்றை அறிவது ஆகும் என கூறினார்.

பண்டி மற்றும் அவரது மாணவர்கள்   "இறந்த" விண்மீன் திரள்களில்  இருந்து சூடான அயனியாக்கப்பட்ட வாயு வெளியேறுவதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்து உள்ளனர். திரள்களின் மையக் கருவிலிருந்து வெளியேற்றப்படும் சக்தி வாய்ந்த 
காற்றினால்
 நட்சத்திர உருவாக்கம்   மூடப்படலாம் என்ற கருத்தை ஆதரிக்கின்றன. 

பண்டி குழுவினர் நட்சத்திரங்களின் இயக்கங்களை ஆய்வு செய்ததின்  மூலம் அவை எப்படி திரட்டப்படுகிறது என்பதை கண்டறிந்து உள்ளனர்.

இந்த ஆய்வு அமைப்பு படிப்படியாக கிட்டத்தட்ட 10,000 க்கும் மேற்பட்ட  விண்மீன் திரள்களை ஆய்வு செய்யும்.



நமது  பால்வெளி மண்டலத்தில்  உள்ள விண்மீன் திரள்கள் 3,000 க்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை  கொண்டிருக்கும் அவை முடிவடையும் போது அதில் 5,000 முதல் 6,000 நட்சத்திரங்கள் இருக்கும்.

Next Story