பூடானுடன் நெருங்கும் சீனா: இந்தியாவுக்கு புதிய சவால்


பூடானுடன் நெருங்கும் சீனா: இந்தியாவுக்கு புதிய சவால்
x
தினத்தந்தி 30 Jan 2019 2:23 PM GMT (Updated: 30 Jan 2019 2:23 PM GMT)

பூடானுடன் சீனா நெருக்கமான உறவை முன்னெடுக்க முயற்சிப்பது, இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைக்கு புதிய சவாலாக திகழ்கிறது.

புதுடெல்லி, 

இந்தியாவின் அண்டை நாடுகளுடன் நெருக்கம் காட்டும் சீனா, அங்கு பல்வேறு கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு இந்தியாவின் இறையாண்மைக்கு கடும் சவால் அளிக்கிறது. அவ்வப்போது, அருணாச்சல பிரதேச எல்லையிலும் சீனா  தனது வேலையை காட்டி வருகிறது.  இந்த நிலையில்,  இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடானுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த சீனா ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், இந்தியாவுக்கான சீன தூதர் லோ ஜாஹூய், பூடானுக்கு மீண்டும் பயணம் செய்துள்ளார். 

பூடானுடன்  சீனா நெருக்கம் காட்ட முயற்சிப்பது இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைக்கு புதிய சவாலாக பார்க்கப்படுகிறது. பூடானில் பதவியேற்றுள்ள புதிய அரசு, தனது பொருளாதாரத்தை பரவலாக்கும் திட்டத்துடன் சீனாவை தனது முக்கிய பங்காளியாக பார்க்க விரும்புவதாக கூறப்படுகிறது. சீன கலாச்சார அதிகாரிகளுடன் லோ ஜாஹூய், பூடானுக்கு சென்றுள்ளார். 

சீனாவின் சர்வதேச பொருளாதார வழித்தடத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரே அண்டை நாடாக தற்போது பூடான் மட்டுமே உள்ளது கவனிக்கத்தக்கது. பூடானின் மொத்த வர்த்தகத்தில் 80 சதவீதம் இந்தியாவின் பங்களிப்பே உள்ளது. 

Next Story