உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 31 Jan 2019 9:30 PM GMT (Updated: 31 Jan 2019 7:18 PM GMT)

* வெனிசூலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவை பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து, செய்திகளை சேகரித்து வெளியிட்டதற்காக வெளிநாடுகளை சேர்ந்த 5 பத்திரிகையாளர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.

* ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணத்தில் 20 தலீபான் பயங்கரவாதிகள் மற்றும் ஒரு ஐ.எஸ். பயங்கரவாதி சண்டையை கைவிட்டுவிட்டு போலீசில் சரண் அடைந்தனர்.

* ஈரான் மற்றும் வடகொரியா உடனான அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையை விமர்சனம் செய்த உளவுத்துறை அதிகாரிகளை ஜனாதிபதி டிரம்ப் கடுமையாக கண்டித்தார்.

* சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் கிழக்கு கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலில் திடீரென தீப்பிடித்தது. எனினும் கப்பலில் இருந்த ஊழியர்கள் 11 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

* வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோரின் 2-வது சந்திப்பு ஆசிய நாடுகளில் ஒன்றில் நடைபெறும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார்.

Next Story