உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 2 Feb 2019 10:30 PM GMT (Updated: 2 Feb 2019 6:51 PM GMT)

ரஷியாவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது.


* மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்டுவதற்கு அரசு நிதியைப் பெறுவதற்காக, நெருக்கடியை நிலையை பிரகடனம் செய்யும் சூழல் நெருங்கி உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி உள்ளார்.

* சீன நாட்டின் போலீஸ், 43 மோசடி நிறுவனங்களின் பட்டியலை பகிரங்கமாக வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

* ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வந்த உண்மை கண்டறியும் 2 குழுக்கள் இப்போது விலகி விட்டன. இது போலிச்செய்திகளை தடுப்பதில் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனத்துக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

* வெனிசூலா நாட்டில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அன்னிய நாடுகளின் தலையீட்டை வெனிசூலா மக்கள் விரும்பவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

* ரஷியாவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது. உடனே பதிலடியாக அமெரிக்காவுடனான ஏவுகணை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக ரஷியா கூறி உள்ளது.

* வடக்கு அயர்லாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

* அமெரிக்காவில் கடும் குளிர் நிலவி வருகிறது. துருவப்பிரதேசம் போல சூழல் உள்ளது. அங்கு கடும் குளிருக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

* சிரியா நாட்டில் அலெப்போ நகரையொட்டிய புறநகரான சலாகுதீனில், உள்நாட்டுப்போரின்போது சேதம் அடைந்த 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


Next Story