உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 3 Feb 2019 7:10 PM GMT (Updated: 3 Feb 2019 7:10 PM GMT)

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் சிரிய ராணுவ வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.


* சிரியா நாட்டில் அலெப்போ நகரையொட்டிய புறநகரான சலாகுதீனில், உள்நாட்டுப்போரின்போது சேதம் அடைந்த 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

* அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை தொடர்ந்து வெனிசூலாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோவுக்கு ஈராக் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. அவரை அந்நாட்டின் இடைக்கால அதிபராக அங்கீகரித்தது.

* சூடானில் பொருாளாதர நிலைமையை கண்டித்து நாட்டில் நடைபெற்று வரும் போராட்டம் சட்டப்பூர்வமானது என அந்நாட்டின் பிரதமர் முத்தாஸ் மூசா தெரிவித்தார்.

* எல்-சல்வடார் நாட்டில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இதையொட்டி நாடுமுழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

* சிரியாவின் டெயிர் அல்-ஜோர் மாகாணத்தில் அபு கமால் நகரில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் சிரிய ராணுவ வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.


Next Story