உலக செய்திகள்

சோமாலியா: கார்குண்டு வெடிப்பில் 11 பேர் பலி + "||" + Somalia: 11 killed in car bomb explosion

சோமாலியா: கார்குண்டு வெடிப்பில் 11 பேர் பலி

சோமாலியா: கார்குண்டு வெடிப்பில் 11 பேர் பலி
சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
மொகதீசு,

சோமாலியா தலைநகர் மொகதீசுவில் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல்-ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டும், வன்முறை தாக்குதல்களை நடத்தியும் பலரை கொன்று வருகின்றனர்.


இந்நிலையில், தலைநகர் மொகதீசுவில் உள்ள மார்க்கெட் பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் சில கட்டிடங்கள் பலத்த சேதமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஆசிரியரின் தேர்வுகள்...