உலக செய்திகள்

ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 4 பேர் சாவு + "||" + Fire in apartment building in Russia; 4 dead

ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 4 பேர் சாவு

ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 4 பேர் சாவு
ரஷிய தலைநகர் மாஸ்கோவின் மத்திய பகுதியில் உள்ள நிக்கிட்ஸ்கை பவுல்வர்டு என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 10–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

மாஸ்கோ,

அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது.

இதையடுத்து வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். எனினும் தீ நாலாபுறமும் சூழ்ந்துகொண்டதால் பலர் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இதற்கிடையில், தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள் ராட்சத ஏணிகள் மூலம் மேல் தளத்தில் உள்ள வீடுகளுக்குள் சிக்கி இருந்த 8 சிறுவர்கள் உள்பட 43 பேரை பத்திரமாக மீட்டனர். அவர்களில் 4 பேர் லேசான தீக்காயம் அடைந்திருந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு
ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழந்தன.
2. ரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு
ரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு ஏற்பட்டது.
3. நெல்லையில் மஞ்சள் ஆலையில் தீ விபத்து; 4 பேர் காயம்
நெல்லையில் மஞ்சள் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் காயம் காயமடைந்து உள்ளனர்.
4. நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து: 14 கடற்படை வீரர்கள் பலி
நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 கடற்படை வீரர்கள் பலியானார்கள்.
5. தாம்பரம் அருகே வீட்டில் தீவிபத்து- மூன்று பேர் உயிரிழப்பு
தாம்பரம் அருகே வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.