உலக செய்திகள்

நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டம் + "||" + Vijay Mallya's Extradition Cleared By UK; Will Appeal, Says Liquor Baron

நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டம்

நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டம்
நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டமிட்டுள்ளார்.
லண்டன்,


கிங் பி‌ஷர்’ குழும நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா (62).  இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட அவர்  தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி வழங்கியுள்ளது.  
உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வரும் 14-ம் தேதிக்குள் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து விஜய்மல்லையா டுவிட்டரில் கூறுகையில், " கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக நான் மேல்முறையீடு  செய்ய இருப்பதாக கூறியிருந்தேன். உள்துறை செயலர் முடிவுக்கு முன்பாக மேல் முறையீடு நடவடிக்கைகளை நான் துவங்கவில்லை.  இப்போது மேல்முறையீடு செய்ய முடிவு செய்துவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடக்கம் - பெடரர் பட்டம் வெல்வாரா?
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.
2. கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவை நோக்கி ‘திருடன், திருடன்’ என கோ‌ஷமிட்ட இந்திய ரசிகர்கள்
லண்டனில் கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவை நோக்கி ‘திருடன், திருடன்’ என இந்திய ரசிகர்கள் கோ‌ஷமிட்டனர்.
3. தென் ஆப்பிரிக்க வீரர் நிகிடி காயம்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டர் என தகவல்
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வீரர் நிகிடி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. லண்டனில் ஐதராபாத் இளைஞர் கத்திக் குத்தில் உயிரிழப்பு : பாகிஸ்தானியர் மீது சந்தேகம்
லண்டனில் ஐதராபாத் இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்தவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
5. வங்கி கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன் விஜய் மல்லையா மீண்டும் உறுதி
வங்கி கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்திவிடுகிறேன் என விஜய் மல்லையா மீண்டும் உறுதியளித்துள்ளார்.