சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள 1,195 இந்தியர்கள் பட்டியல் வெளியாகிறது

சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கிய 1,195 இந்தியர்கள் பட்டியல் வெளியாகிறது.
எச்எஸ்பிசி (HSBC) வங்கியின் சுவிஸ் கிளையில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் விபரத்தை வழங்க சுவிட்சர்லாந்து ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள 628 இந்தியர்களின் பட்டியலை பிரான்ஸ் அதிகாரிகள் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிக்கை அமைப்புகள் ஒன்றிணைந்து சுவிஸ் வங்கிகளில் 2006-07 ஆம் ஆண்டில் ஆயிரத்து 195 இந்தியர்கள் ரூ.24,420 கோடிக்கு கணக்கு வைத்திருப்பதைக் கண்டறிந்தனர்.
இதில் 276 பேரின் கணக்குகளில் மட்டும் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமாக பணம் பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் லோசானில் உள்ள நீதிமன்ற உத்தரவையடுத்து கணக்கு விபரங்களை பரிமாறுவது குறித்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது விபரங்களை வெளியிட அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது.
Related Tags :
Next Story






