உலக செய்திகள்

சோமாலியா: 40 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை + "||" + Somalia: 40 al-Shabab terrorists shot dead

சோமாலியா: 40 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சோமாலியா: 40 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
சோமாலியாவில் 40 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மொகதீசு,

சோமாலியாவில் லோவர் ஷாபெல்லே பகுதியில், 40 அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல்-ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டும், வன்முறை தாக்குதல்களை நடத்தியும் பலரை கொன்று வருகின்றனர்.

இந்நிலையில் தெற்கு சோமாலியாவில் உள்ள லோவர் ஷாபெல்லே பகுதியில், பார்சோலே கிராமத்தில் அல்-ஷபாப் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது 40 அல்- ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் தேசிய நுண்ணறிவு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

முன்னதாக அல்-ஷபாப் இயக்கத்தினர் திங்களன்று சோமாலியாவின் தலைநகரான மொகாதீசுவில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
சோமாலியாவில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
2. சோமாலியா: கார்குண்டு வெடிப்பில் 11 பேர் பலி
சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
3. சோமாலியா: ராணுவத்தாக்குதலில் 73 பயங்கரவாதிகள் பலி
சோமாலியாவில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 73 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
4. சோமாலியா: அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து குண்டு வெடிப்பு - 22 பேர் பலி
சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 22 பேர் பலியாயினர்.
5. சோமாலியாவில் அமெரிக்க வான்தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் பலி
சோமாலியாவில் அமெரிக்க வான்தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் பலியாயினர்.