உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 10 Feb 2019 10:45 PM GMT (Updated: 10 Feb 2019 7:10 PM GMT)

ஜப்பானில் அமாமி ஓஷிமா தீவில் நேற்று மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது.

* ஜப்பானில் அமாமி ஓஷிமா தீவில் நேற்று மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 புள்ளிகளாக பதிவானது. இதே போன்று தென்கொரியாவில், தென்கிழக்கு கடலோரப்பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நில நடுக்கங்களால் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

* சீனாவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தொடர்ந்து நடந்த சாலை விபத்துகளில் 13 பேர் உயிரிழந்தனர்.

* அபுதாபி கோர்ட்டுகளில் அரபி, ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் இந்தி மூன்றாவது அலுவல் மொழியாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

* ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் பாதுகாப்பு படைகள் அதிரடி சோதனை நடத்தி 4 ஹெராயின் தயாரிப்பு ஆலைகளை அழித்தன.

* அரசியல் நிலைத்தன்மை இல்லாமை, பணவீக்கம், பொருளாதார மந்தம் ஆகிய பிரச்சினைகளால் தவிக்கிற வெனிசூலாவில் 5 நாள் போர்ப்பயிற்சியை ராணுவம் தொடங்கி உள்ளது.

* ஈராக்கில் 1 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கத்தக்க அளவில் பிரமாண்ட கால்பந்து மைதானம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சவுதி அரேபிய அரசு தூதுக்குழு பாக்தாத் போய் சேர்ந்துள்ளது.

* மாசிடோனியா நாட்டில் ஏப்ரல் மாதம் 21-ந் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story