உலக செய்திகள்

அடுத்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் மேலும் ஒரு பெண் எம்.பி. + "||" + The next year presidential election: Democrat candidate contesting a further female MP

அடுத்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் மேலும் ஒரு பெண் எம்.பி.

அடுத்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் மேலும் ஒரு பெண் எம்.பி.
அடுத்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் மேலும் ஒரு பெண் எம்.பி. களம் இறங்க உள்ளார்.
வாஷிங்டன், 

அடுத்த ஆண்டு நவம்பர் 3-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர் ஆவதற்கு பலத்த போட்டி நிலவுகிறது. இந்திய வம்சாவளி பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் ஏற்கனவே தான் வேட்பாளர் போட்டியில் இருப்பதாக அறிவித்துள்ளார். இதே போன்று இந்திய வம்சாவளி இந்து எம்.பி. துளசி கப்பார்டும் வேட்பாளர் போட்டியில் களம் இறங்கி இருக்கிறார்.

மேலும் நியூஜெர்சி எம்.பி. கோரி புக்கர், நியூயார்க் எம்.பி. கிர்ஸ்டன் கில் பிராண்ட் ஆகியோரும் வேட்பாளர் போட்டியில் இறங்கி உள்ளனர்.

இந்தநிலையில் செனட் சபை பெண் எம்.பி. எலிசபெத் வாரனும் (வயது 69) வேட்பாளர் போட்டியில் தானும் இருப்பதாக மசாசூசெட்ஸ் மாகாணம், லாரன்சில் உள்ள தனது வீட்டில் வைத்து நேற்றுமுன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அப்போது அவர், “வாஷிங்டனில் பணக்காரர்களிடம் இருந்தும், நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டுள்ளவர்களிடமும் இருந்து அதிகாரத்தை எடுத்து, அவை யாருக்கு சேர வேண்டுமோ அவர்களின் கையில் ஒப்படைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது” என குறிப்பிட்டார்.