ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ‘டிரம்ப் சிறைக்கு செல்வார்’ - செனட் சபை உறுப்பினர் பேச்சு


ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ‘டிரம்ப் சிறைக்கு செல்வார்’ - செனட் சபை உறுப்பினர் பேச்சு
x
தினத்தந்தி 11 Feb 2019 11:15 PM GMT (Updated: 11 Feb 2019 8:28 PM GMT)

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக டிரம்ப் சிறைக்கு செல்வார் என செனட் சபை உறுப்பினர் கூறியுள்ளார்.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான களத்தில் மூத்த செனட் சபை உறுப்பினர் எலிசபெத் வாரன் உள்ளார். இதற்காக அவர் ஜனநாயக கட்சியினரிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று அயோவா மாகாணத்தில் ஜனநாயக கட்சியினரை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “ஜனாதிபதி டிரம்ப் தனது பதவி காலத்தில் முழுமையாக பணியாற்ற மாட்டார். 2020 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக அவர் சிறைக்கு செல்வார். இனவெறி மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தினந்தோறும் டுவிட்டரில் கருத்துகளை டிரம்ப் பதிவிடுகிறார். உண்மையில் அந்த கருத்துகள் மிகவும் மோசமானவை. மக்கள் அந்த டுவிட்டர் பதிவுகளை நம்பி ஏமாறக்கூடாது” என கூறினார்.


Next Story