ஆப்கானிஸ்தானின் முதல் அதிபர் 93 வயதில் மரணம்


ஆப்கானிஸ்தானின் முதல் அதிபர் 93 வயதில் மரணம்
x
தினத்தந்தி 12 Feb 2019 9:12 AM GMT (Updated: 12 Feb 2019 9:12 AM GMT)

சோவியத் படைகள் வாபஸ் பெற்ற பின் ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் அதிபரான முஜாதிதி மரணம் அடைந்து உள்ளார்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் முன்னாள் சோவியத் யூனியனின் ஆதிக்கம் 10 ஆண்டுகளுக்கு பின் கடந்த 1989ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.  அவர்களுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பெற்ற கொரில்லா படைகள் போரிட்டன.  மிக சிறிய மற்றும் மித அளவிலான இந்த படைகளின் தலைமையை முஜாதிதி ஏற்றார்.  இந்த நிலையில் சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வாபஸ் பெறப்பட்டன.

இதன்பின் கம்யூனிச ஆதரவு பெற்ற அரசு 1992ம் ஆண்டில் வீழ்ச்சி அடைந்தது.  இதனை தொடர்ந்து முஜாதிதி 2 மாதங்கள் ஆப்கானிஸ்தான் அதிபராக பொறுப்பேற்றார்.  அவரை தொடர்ந்து பர்ஹானுதீன் ரபானி 4 மாதங்கள் அதிபராக பொறுப்பேற்று கொண்டார்.

ஆனால் முஜாஹிதீன் குழுக்களுக்கும் அரசுக்கும் இடையேயான போரினை அடுத்து ரபானி 4 ஆண்டுகள் அதிபர் பதவியில் தொடர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  எனினும், கடந்த 1996ம் ஆண்டு தலீபான் தீவிரவாதிகள் ஆட்சி அதிகாரத்தினை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  இந்த நிலையில், முஜாதிதி தனது 93 வயதில் மரணம் அடைந்து உள்ளார்.

Next Story