உலக செய்திகள்

பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீசார் பலி + "||" + Pakistan: Five policemen killed in terror attack

பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீசார் பலி

பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீசார் பலி
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 போலீசார் பலியாயினர்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் போலீசார் ரோந்து வாகனத்தின்மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 போலீசார் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் கைபர் பகதுங்வா மாகாணத்துக்குட்பட்ட டேரா இஸ்மாயில் கான் மாவட்டம், பேஹ்ரோ பகுதியில் போலீசார் ரோந்து வாகனத்தின்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிக்சூடு தாக்குதல் நடத்தினர்.


இந்த சம்பவத்தில் 4 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஆய்வாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. சம்பவ இடத்தில் கூடுதலாக போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  பயங்கரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...