உலக செய்திகள்

மெக்சிகோவில் 5 போலீஸ் அதிகாரிகள் கடத்தி கொலை + "||" + 5 police officers kidnapped and killed in Mexico

மெக்சிகோவில் 5 போலீஸ் அதிகாரிகள் கடத்தி கொலை

மெக்சிகோவில் 5 போலீஸ் அதிகாரிகள் கடத்தி கொலை
மெக்சிகோவில் 5 போலீஸ் அதிகாரிகள் கடத்தி கொல்லப்பட்டனர்.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள மிச்சோகன் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படுவதும், இதில் பலர் கொல்லப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.


இந்த நிலையில், மிச்சோகன் மாகாணத்தின் துசான்ட்லா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் 5 பேரை அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த 4-ந் தேதி கடத்தி சென்றனர். இதையடுத்து சக போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் கதி என்ன என்பது தெரியாமலேயே இருந்தது. இந்த நிலையில் சிடாகவ்ரோ நகரில் கேட்பாரற்று நின்றுகொண்டிருந்த ஒரு காருக்குள் 5 பேர் பிணமாக கிடந்தனர். அவர்கள் கடத்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் என்பதும், துப்பாக்கியால் சுட்டு அவர்கள் படுகொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் சபபோன் நகரில் 3 ரகசிய புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
2. மெக்சிகோவில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 13 பேர் பலி
மெக்சிகோவில் சிறிய ரக ஜெட் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 13 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
3. மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு; 2 போலீசார் பலி
மெக்சிகோவில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் பலியாயினர். அங்கு தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.
4. மெக்சிகோ நாட்டில் பயங்கரம்: விருந்தில் துப்பாக்கிச்சூடு - 13 பேர் உயிரிழப்பு
மெக்சிகோ நாட்டில் விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
5. மெக்சிகோ: இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு; 14 பேர் பலி
மெக்சிகோவில் இரவு விடுதியில் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலியாகினர். #MexicoCity