உலக செய்திகள்

வங்காளதேசத்தில் புதிய சட்டம் வருகிறது: ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை + "||" + New law comes in Bangladesh: 6 months imprisonment for building a dog over a day

வங்காளதேசத்தில் புதிய சட்டம் வருகிறது: ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை

வங்காளதேசத்தில் புதிய சட்டம் வருகிறது: ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை
வங்காளதேசத்தில் ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால், 6 மாதம் சிறைதண்டனை அளிக்கும் புதிய சட்டம் வர உள்ளது.
டாக்கா,

வங்காளதேசத்தில் 1920-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘விலங்குகள் நலச்சட்டம்’ விலங்குகளை கொடுமைப்படுத்துதல், பலி கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகை செய்ததது.

இந்த நிலையில் 1920-ம் ஆண்டு சட்டத்தை அடிப்படையாக கொண்டு புதிய வரைவு சட்டம் ஒன்றை வங்காளதேச அரசு உருவாக்கி உள்ளது. இது ‘விலங்குகள் நலச்சட்டம் 2019’ என அழைக்கப்படுகிறது. முறையான காரணங்கள் இன்றி ஒரு நாள் அல்லது அதற்கு மேல் நாயை கட்டிப்போடுவது தண்டனைக்குரிய குற்றம் என இந்த சட்டம் கூறுகிறது. இதனை மீறுவோருக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லுவது மற்றும் மத சடங்குகளுக்காக விலங்குகளை பலி கொடுப்பது போன்றவற்றை குற்றமாக இந்த புதிய சட்டம் கருதவில்லை.


இந்த சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்தில் கோர விபத்து: பாலம் உடைந்து கால்வாய்க்குள் விழுந்த ரெயில் - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
வங்காளதேசத்தில் பாலம் உடைந்து கால்வாய்க்குள் ரெயில் விழுந்ததில் பலி எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்ந்துள்ளது.
2. வங்காளதேசம்-இலங்கை அணிகள் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-இலங்கை அணிகள் மோதுகின்றன.
3. வங்காளதேசத்தில் மதரஸாக்களில் பெண் ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு உதவி பெறும் இஸ்லாமியக் கல்வி நிலையங்களான மதரஸாக்களில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
4. டாக்காவில் இரு பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை
வங்காளதேசத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சோதனை மேற்கொண்டபோது இரு பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டனர்.
5. இந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார்
இந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டதால் வெளியேற்றப்பட்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார்.