அமெரிக்கா-மெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சினை: அரசுத்துறைகள் முடக்கத்தை தவிர்க்க புதிய உடன்பாடு


அமெரிக்கா-மெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சினை: அரசுத்துறைகள் முடக்கத்தை தவிர்க்க புதிய உடன்பாடு
x
தினத்தந்தி 12 Feb 2019 11:15 PM GMT (Updated: 12 Feb 2019 7:44 PM GMT)

அமெரிக்கா-மெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சினை தொடர்பாக, அரசுத்துறைகள் முடக்கத்தை தவிர்க்க புதிய உடன்பாடு எட்டப்பட்டது.

வாஷிங்டன்,

மெக்சிகோ எல்லையில் சுவர்கட்டும் ஜனாதிபதி டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க ஜனநாயக கட்சியினர் மறுத்ததால், பல்வேறு அரசுத்துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுத்துறைகள் முடங்கின. அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக 35 நாட்களுக்கு மேல் அரசுத்துறைகள் முடக்கம் நீடித்தது.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு சமீபத்தில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பான மத்திய நிதி ஆதரவு ஒப்பந்தம் வருகிற 15-ந் தேதி காலாவதியாகிறது. இந்த நிலையில் மீண்டும் அரசுத்துறைகள் முடக்கம் நிகழாமல் தடுக்க எல்லை பாதுகாப்பு பிரச்சினை குறித்து குடியரசு கட்சியினர் மற்றும் ஜனநாயக கட்சியினர் இடையே நேற்று நீண்டதொரு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இரு தரப்பினரிடையே முக்கிய உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் இந்த உடன்பாட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்த விரிவான தகவல்கள் இல்லை.

அதே சமயம் இந்த உடன்படிக்கையை டிரம்ப் ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை.

Next Story