உலக செய்திகள்

விண்வெளிக்கு அனுப்பிய டெஸ்லா ரோட்ஸ்டர் கார் காஸ்மிக் கதிர்களால் பாதிப்பு + "||" + SpaceX launch: When will Elon Musk's car CRASH into Earth? Latest path projection

விண்வெளிக்கு அனுப்பிய டெஸ்லா ரோட்ஸ்டர் கார் காஸ்மிக் கதிர்களால் பாதிப்பு

விண்வெளிக்கு அனுப்பிய  டெஸ்லா ரோட்ஸ்டர் கார் காஸ்மிக் கதிர்களால் பாதிப்பு
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் விண்வெளிக்கு அனுப்பிய டெஸ்லா ரோட்ஸ்டர் கார், காஸ்மிக் கதிர்களால் பாதிக்கப்படும் என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
பால்கான் ஹேவி என்ற ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், டெஸ்லா ரோட்ஸ்டர் என்ற காரை விண்வெளிக்கு அனுப்பியது. இதன் விலை சுமார் 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ.1.41 கோடி ) ஆகும். ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனர் எலன் மஸ்க்கின் விருப்பப்படி இந்த கார் கடந்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. ஸ்டார்மேன் என்று அழைக்கப்படும் இந்த கார், விண்வெளியில் ஒரு பில்லியன் ஆண்டுகள் செயல்படும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறியது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று அதனை பொய்யாக்கியுள்ளது. அதாவது, ரோட்ஸ்டர் கார் நுண்துகள்களால் நிரப்பப்பட்டதன் காரணமாக, அதன் பிரகாசமான சிவப்பு நிறம் சூரிய கதிர்வீச்சினால் மாறியதாகவும், இதனால் காரின் நிறம் தொடர்ந்து சிவப்பாக இருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காஸ்மிக் கதிர்கள் மற்றும் சூரிய கதிர்வீச்சு காரணமாக ரோட்ஸ்டரின் பிளாஸ்டிக் தோல் மற்றும் துணி  உள்ள கார்பன் பிணைப்புகள் சிதைக்கப்படும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் வேதிப்பொருட்கள் ஒரு ஆண்டு கூட தாக்குப்பிடிக்காது என வேதியியலாளர் வில்லியம் கரோல் தெரிவித்துள்ளார்.

இதனால் இன்னும் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு கூட டெஸ்லா கார் விண்வெளியில் இருந்தாலும், அது வெறும் அலுமினிய எலும்புக்கூடாக மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது. அல்லது அந்த கார் வளிமண்டலத்தின் வழியாக பூமியில் வந்து விழலாம். ஆனால், அதற்கான வாய்ப்பு 6 சதவிகிதம் மட்டுமே என்று கூறப்படுகிறது. மாறாக வெள்ளி கிரகத்தின் மீது மோதினால், மோசமான வெப்பத்தின் காரணமாக உருகுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு விடை கொடுத்தது நாசா
14 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு விடை கொடுத்து உள்ளது நாசா. #NASA
2. ஆண்களின் மூளையை விட இளமையாக இருக்கும் பெண்களின் மூளை -ஆய்வில் தகவல்
ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை தங்கள் வயதை விட இளமையோடு இருப்பதாக அமெரிக்க ஆய்விதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
3. பூமிக்கு அருகில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட விண்மீன் திரள்களின் வரைபடம் வெளியிடப்பட்டு உள்ளது
பூமிக்கு அருகில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட விண்மீன் திரள்களின் டேட்டா மற்றும் வரைபடம் வெளியிடபட்டு உள்ளது.
4. பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிப்பு: அங்கு எப்படி சென்றது விஞ்ஞானிகள் அதிர்ச்சி
பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாறை அங்கு எப்படி சென்றது என விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
5. பூமியின் வட காந்த முனையில் விரைவான மாற்றம் : திசைகாட்டும் கருவியில் மாற்றம் அவசியம் ஆய்வாளர்கள்
பூமியின் வட காந்த முனையில் விரைவான மாற்றம் அடைந்து வருகிறது திசைகாட்டும் கருவியில் புதிய மாற்றங்கள் அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...