உலக செய்திகள்

ஜப்பானில் 400 ஆண்டுகள் பழமையான போன்சாய் மரம் திருட்டு + "||" + The 400-year-old Bonsai tree theft in Japan

ஜப்பானில் 400 ஆண்டுகள் பழமையான போன்சாய் மரம் திருட்டு

ஜப்பானில் 400 ஆண்டுகள் பழமையான போன்சாய் மரம் திருட்டு
ஜப்பானில் 400 ஆண்டுகள் பழமையான போன்சாய் மரம் திருடப்பட்டது.
டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள சாய்டாமா பிராந்திய பகுதியை சேர்ந்த மூத்த தம்பதி, தங்கள் வீட்டின் அருகே பூங்கா அமைத்து 3 ஆயிரம் போன்சாய் மரங்களை வளர்த்து வருகிறார்கள். போன்சாய் மரங்கள் என்பது இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களை உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி தொட்டிகளில் வளர்ப்பது ஆகும். இந்த நிலையில், அந்த தம்பதியின் பூங்காவிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், 8 போன்சாய் மரங்களை திருடி சென்றனர். திருடப்பட்ட மரங்களில் 400 ஆண்டுகள் பழமையான ஷிம்பாக்கு மரமும் ஒன்று. அந்த மரத்தின் மதிப்பு 90 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.63 லட்சத்து 52 ஆயிரம்) ஆகும்.


அந்த மரங்களை தாங்கள் குழந்தைகளை போல் வளர்த்து வந்ததாகவும், அவை காய்ந்து போனால் தாங்கள் பெருந்துயர் அடைவோம் என கூறும் அந்த தம்பதி, மரங்களை திருடி சென்றவர்கள் அவற்றுக்கு முறையாக நீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உலகைச் சுற்றி...
ஜப்பானின் தொரிஸ்கிமா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
2. ஜப்பானில் தானியங்கி ரெயில் தவறான பாதையில் சென்று விபத்து, 14 பேர் காயம்
ஜப்பானில் தானியங்கி ரெயில் தவறான பாதையில் சென்று விபத்து நேரிட்டதில் 14 பேர் காயம் அடைந்தனர்.
3. ஜப்பானில் பயங்கரம்: கத்திக்குத்து தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
ஜப்பானில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பள்ளி மாணவி உள்பட பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
4. உலகைச்சுற்றி...
ஜப்பான் தங்களிடம் இருந்து எப்.35 ரகத்தின் 105 போர் விமானங்களை வாங்க முடிவு செய்து உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
5. ஜப்பானில் மர்ம நபர் கத்தியால் தாக்குதல்: 2 பேர் பலி, 17 பேர் காயம்
ஜப்பானில் மர்ம நபர் கத்தியால் தாக்குதல் நடத்தியதில் 8 குழந்தைகள் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.