உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world news

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருவதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
* பிரேசிலின் மினராஸ் கெரயிஸ் மாகாணத்தில் அணை உடைந்து ஊருக்குள் சேறு புகுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்தது. மாயமான 155 பேரின் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை.

* அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருவதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

* ஆப்கானிஸ்தானின் சபூல் மாகாணம் அர்கன்டாப் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிகளில் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* துருக்கியின் புர்சா மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் சிரியாவை சேர்ந்த 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

* ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க பிரதிநிதிகளுடன் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர்.

* வெனிசூலா மக்களுக்கு அயல்நாடுகளின் மனிதாபிமான உதவிகள் கிடைக்கவிடாமல் தடுக்கும் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகளுக்கு அமெரிக்கா ராணுவ உதவி அளிப்பதை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
* வெனிசூலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவை பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து, செய்திகளை சேகரித்து வெளியிட்டதற்காக வெளிநாடுகளை சேர்ந்த 5 பத்திரிகையாளர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.
2. உலகைச்சுற்றி...
* சிரியாவில் அமெரிக்க படை விலகினாலும், பிரான்ஸ் படை தொடர்ந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3. உலகைச்சுற்றி...
* தீபாவளி பண்டிகையையொட்டி, ஐ.நா. அஞ்சல் முகமை சிறப்பு தபால் தலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது. இதற்காக இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி அக்பருதீன் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். இதற்கிடையே தீபாவளி வாழ்த்து தெரிவித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ செய்தி வெளியிட்டார். அதில் அவர் இருளை ஒளி வீழ்த்தி வெற்றி கண்டதைக் கொண்டாடும் பண்டிகை தீபாவளி என கூறி உள்ளார்.