பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா கண்டிப்பு


பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா கண்டிப்பு
x
தினத்தந்தி 15 Feb 2019 4:07 AM GMT (Updated: 15 Feb 2019 4:21 AM GMT)

பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாஷிங்டன்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும்  ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

பயங்கரவாதிகளின் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சண்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “ பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதையும் அவர்களுக்கு புகலிடம் வழங்குவதையும் பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு இந்த தாக்குதல் மூலம் வலுப்படவே செய்யும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story